Posts

Showing posts from September, 2023

ஒத்திகை ஓகே.. இன்னும் ஒரு வாரம்தான்..! விண்கல் மாதிரியுடன் பூமியை நெருங்கும் நாசாவின் விண்கலம்தரையில்

Image
ஒத்திகை ஓகே.. இன்னும் ஒரு வாரம்தான்..! விண்கல் மாதிரியுடன் பூமியை நெருங்கும் நாசாவின் விண்கலம் தரையில் விழும் கேப்ஸ்யூல் மீட்கப்பட்டு, ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படும். பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நாசா செலுத்தியது இத்திட்டமானது, சிறுகோள்களை ஆய்வு செய்வது மற்றும் அவற்றின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவருவதற்கான முக்கியமான செயல்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தது 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், அதன் ஆரம்பக் கட்டக் கோளுருவாக்கம், புவியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் கரிமச் சேர்மங்களின் மூலம் ஆகியவற்றை ஆராய உள்ளனர்.ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம், 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. தூரம் பயணித்து, 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பென்னு என்ற விண்கல்லை நெருங்கியது. பென்னுவில் இருந்த...