சிவசக்தி: சந்திரயான்-3 நிலவில் இறங்கிய இடத்திற்கு மோதி சூட்டிய பெயரில் என்ன பிரச்னை?சிவசக்தி - சர்வதேச சமூகம் ஏற்குமா?

சிவசக்தி: சந்திரயான்-3 நிலவில் இறங்கிய இடத்திற்கு மோதி சூட்டிய பெயரில் என்ன பிரச்னை?
சிவசக்தி - சர்வதேச சமூகம் ஏற்குமா?
சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 26ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி நேரில் சந்தித்தார்.

அப்போது நிலாவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி ‘சிவசக்தி’ எனப் பெயரிட்டார். தற்போது இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

பிரதமர் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை சார்ந்த பெயரை வைத்தது கேள்விக்கு உள்ளாக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், இதுபோன்ற பெயரை சர்வதேச வானியல் கழகத்தின் விதிகள்படி வைக்கவே முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய பூனேவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், “சந்திரயான்-3இன் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்தின் வெற்றி என அறிவித்துவிட்டு, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு தன்னிச்சையாக ‘சிவசக்தி’ என பிரதமர் பெயரிட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது,” என்று குறிப்பிடுகிறார்.

Comments